மாற்றப்படுகின்றதாம் பிணைமுறி அறிக்கை : கசிந்தது இரகசிய தகவல்

Published By: Robert

17 Jan, 2018 | 11:17 AM
image

மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் குறித்த விசா­ரணை அறிக்­கையில் மாற்­றங்கள் செய்­யப்­ப­டு­வ­தாக இர­க­சிய தக­வல்கள் கிடைத்­துள்­ள­தா­கவும் குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றும் நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி முன்­னெ­டுக்­கின்றார் எனவும் தேசிய சுதந்­திர முன்­னணி குற்றம் சுமத்­தி­யுள்­ளது. 

Image result for பிணைமுறி அறிக்கை virakesari

அறிக்கை பாரா­ளு­மன்­றத்­திலும், மக்கள் மத்­தி­யிலும் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு  முன்­னரே ரவி கரு­ணா­நா­ய­க்க­வுக்கும், அர்­ஜுன மகேந்­தி­ர­னுக்கும் வழங்­கப்­பட்­டுள்­ளது எனவும்  அக்­கட்சி சுட்­டிக்­காட்­டி­யது. 

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற நிலையில் அதில் கலந்­து­கொண்டு  உரை­யாற்­று­கை­யி­லேயே   கட்­சியின் இணைத்­த­லைவர் ஜயந்த சம­ர­வீர எம்.பி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை குறித்து நாட்டில் பாரிய சர்ச்சை எழுந்­துள்­ளது. எனினும்   உண்­மை­களை வெளிப்­ப­டுத்­து­வதில்   பாரிய மோச­டி­களை இந்த அர­சாங்கம் செய்து வரு­கின்­றது. கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி ஜனா­தி­ப­தியின் கைகளில் அறிக்கை கிடைக்­கப்­பெற்ற போதிலும் இன்­று­வ­ரையில் அறிக்கை குறித்து வாய் திறக்­காது செயற்­பட்டு வரு­கின்­றார்.  மத்­திய வங்கி அறிக்கை இன்னும் மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை, பாரா­ளு­மன்­றத்­திலும் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. 

ஆனால், அறிக்­கையை   மத்­திய வங்கி முன்னாள் ஆளுநர் மற்றும் ரவி கரு­ணா­நா­யக்க ஆகிய  இரு­வ­ருக்கும் ஜனா­தி­பதி கொடுத்­துள்ளார். கள்வர்­க­ளி­டமே அறிக்­கை­யினை ஏன் கொடுத்தார்? பிர­த­மரும் அறிக்­கை­யினை பெற்­றுக்­கொண்­டுள்ளார். அறிக்கை கிடைக்­கப்­பெற்று 16 நாட்கள் கடந்­துள்ள நிலை­யிலும் உரிய குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்­கு­வ­தாக கூறியும் எந்­த­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக தனது பதவிக் காலம் குறித்து ஆராய்ந்­து­கொண்­டி­ருக்­கின்றார்.

எமக்குக் கிடைத்­துள்ள இர­க­சிய தக­வலின் படி அறிக்­கையில் மாற்றம் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தாக தெரிய வரு­கின்­றது. குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றும் வகையில் அறிக்கை மாற்­றி­ய­மைக்­கப்­ப­டு­வ­தாக தெரிய வரு­கின்­றது. அறிக்­கையில் ஒரு எழுத்­தேனும்  மாற்றம் பெற்­றி­ருப்பின் அதனை நாம் வேடிக்கை பார்க்க  மாட்டோம். தேர்­தலில் வெற்றி பெறும் நோக்­கத்தில் இப்­போது மேடை­களில் பொய்­யான கருத்­துக்­களை கூறி­னாலும் குற்றவாளிகள் அனைவரையும்  காப்பாற்றும் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி தான் நடுநிலையான தலைவர் என கூறுவது உண்மையெனின் குற்றவாளிகளை தண்டிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30