இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் Huawei ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

19 Nov, 2015 | 10:56 AM
image

இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போனாகத் திகழ்கின்ற Huawei, தென்கிழக்காசிய சந்தைகள் தொடர்பான சமீபத்தைய அறிக்கையொன்றின் பிரகாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015 ஒக்டோபர் நிறைவில் 140 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

முன்பதாக செப்டெம்பரில் வெளியிட்ட அறிக்கையொன்றில் 2015 ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 300மூ என்ற விற்பனை வளர்ச்சியை அடையப்பெற்றுள்ளதாக Huawei ஸ்ரீலங்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது 2012 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை தொழிற்பாடுகளை ஆரம்பித்த பின்னர் விற்பனை அளவைப் பொறுத்தவரையில் மிகச் சிறந்த ஆண்டாகவும் அமைந்துள்ளது. 2015 ஒக்டோபர் நிறைவில் தென்கிழக்காசிய பிராந்தியத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 வீதத்தினால்  அதிகரித்துள்ளது. 

இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான Huawei இன் உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியூகருத்துத் தெரிவிக்கும் போது,

இது Huawei நிறுவனத்திற்கும், இலங்கையிலுள்ள எமது நுகர்வோர் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு காலகட்டமாக அமைந்துள்ளது. எமது சேவை வழங்கல் மீது நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி, நாடெங்கிலுமுள்ள எமது நுகர்வோரை எட்டும் வகையில் சிங்கருடனான எமது பிரத்தியேக விநியோக முகவராண்மை மூலமாக அந்த நிறுவனத்துடன் ஒன்றிணைந்து தொழிற்படுவோம்.

இலங்கையில் எமது தொழிற்பாடுகளை ஆரம்பித்து மிகவும் குறுகிய காலப்பகுதியான மூன்று வருடங்களில் இத்தகைய மகத்தான பெறுபேறுகளை அடைவதற்கு உறுதுணை புரிந்தமைக்காக, சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம், எமது சிறந்த தூதுவர்களாக விளங்குகின்ற எமது வாடிக்கையாளர்கள் மற்றும் இலங்கையிலுள்ள எமது அணி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

உலகிலுள்ள மிகவும் பாரிய சந்தை ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்றான GFK இன் புள்ளி விபரங்களின் படி, சீனாவின்  ஸ்மார்ட்போன் சந்தையில் மார்ச் முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் முறையே 12.9%, 13.6%, 14.4%, 15.2%, 14.9%, 14.9% மற்றும் 15.2% என்ற சந்தைப்பங்குடன் முன்னிலையில் திகழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்டில் உயர் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் சந்தையில் 3000 முதல் 4000 யுவான் விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் மத்தியில் சந்தையில் 27.5% இனை Huawei கொண்டிருந்தது. 30.1% சந்தைப்பங்கினைக் கொண்டிருந்த அப்பிள் போன்களுக்கு அடுத்த ஸ்தானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்