சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்க பிஸ்கட்டுகளை கடத்திவந்த இருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

7 கிலோ கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுகளை கடத்திவரும் போதே இவர்கள் இருவரையும் காங்சேன்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபாவென தெரிவிக்கப்படுகின்றது.