இலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்கள் மத்தியில் முதலிடத்தில் திகழ்ந்து வருகின்ற Huawei தான் புதிதாக அறிமுகம் செய்து வைத்துள்ள நான்கு வில்லைகள் (Quad lenses) கொண்ட nova 2i கொண்ட ஸ்மார்ட்போனை உபயோகித்து Huawei பாவனையாளர்கள் தங்களுடைய புகைப்படவியல் திறமைகளைக் காண்பிப்பதற்கான ஒரு தளமேடையாக முகநூல் குழுவொன்றை அண்மையில் ஆரம்பித்துள்ளது. 

இந்த முகநூல் குழுவை முகநூல் பாவனையாளர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள முடிவதுடன்  http://bit.ly/HuaweiNovaSeriesSriLanka ஊடாக அதனை அடைந்துகொள்ள முடியும்.

இக்குழுவிலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வசப்படுத்துகின்ற புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதுடன் நேர்த்தியான புகைப்படத்தை வசமாக்கிக் கொள்வதற்கான பயனுள்ள அறிவுரைகளை கலந்தாலோசித்தல், தொழில்ரீதியான புகைப்படவியலாளர்களிடமிருந்து புகைப்படவியல் தொடர்பான அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் ஏனைய புகைப்படவியல் ஆர்வலர்களுடன் இடைத்தொடர்பாடல்களைப் பேணுதல் ஆகிய வாய்ப்புக்களும் கிடைக்கப்பெறுகின்றன. மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ‘Sights of Sri Lanka’என்ற தொலைபேசி புகைப்படவியல் போட்டியுடன் ஆரம்பித்து, மாதாந்த புகைப்படவியல் போட்டிகளையும் Huawei முகநூல் குழு முன்னெடுக்கவுள்ளது. இலங்கையின் வரலாறுரூபவ் கலாச்சாரம் மற்றும் அழகு ஆகியவற்றை வசப்படுத்தும் புகைப்படங்களை பகிர்ந்து ‘Sights of Sri Lanka’ புகைப்படவியல் போட்டியில் பங்கேற்க முன்வருமாறு Huawei தனது பாவனையாளர்களை ஊக்குவிக்கின்றது.

இப்புதிய எண்ணக்கரு தொடர்பில் Huawei Device Sri Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தல்  முகாமையாளரான ருவான் கமகே வெளியிடுகையில்,

“முதன்முறையாக அறிமுகமாகியுள்ள தனது நான்கு பரிமாண கமெரா (Quad Camera) மற்றும் தவாளிப்பின்றிய (bezel-less) முழுமையான தோற்ற முகத்திரை போன்ற புத்தாக்கமான தொழில்நுட்பங்களின் அனுகூலத்துடன் புகைப்படங்களை வசப்படுத்தி, பார்ப்பதற்கான நேர்த்தியான ஒரு ஸ்மார்ட்போனாக Huawei nova 2i மாறியுள்ளமையை அதன் பிரதான பண்புக்கூறுகளுள் ஒன்றாக நாம் காணப்பெற்றுள்ளோம்.

சந்தையில் கிடக்கப்பெறுகின்ற ஏனைய உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில், இந்த விலை வரிசையில் கிடைக்கப்பெறுகின்ற மிகச் சிறந்த ஸ்மார்ட்போன்களுள் ஒன்றாக Huawei nova 2i மாறியுள்ளது. அனுபவமற்ற மற்றும் தொழில்சார்ரீதியான புகைப்படவியலாளர்களை ஒன்றுபடுத்துவதற்கு இந்த புதிய Huawei முகநூல் குழு உதவுவதுடன் புகைப்படவியல் கலையின் ஊடாக அவர்கள் தங்களது படைப்பாக்கத்திறமைகளை வெளிக்காண்பிக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.

Huawei பாவனையாளர்கள் தங்களுடைய Huawei தொலைபேசி சாதனங்களை உபயோகித்து வசப்படுத்திய அழகான புகைப்படங்களை ஏனையவர்களுடன் பகிர்ந்து, தமது கருத்துக்களைப் பரிமாறி, இணையத்தின் மூலமாக ஏனைய உறுப்பினர்களுடன் இடைத்தொடர்புகளைப் பேணி, மிகச் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறி மற்றும் ஸ்மார்ட்போன் பாவனை மற்றும் ஏற்பாட்டு அமைப்புக்கள் தொடர்பான தனிப்பட்ட பரீட்சயங்கள் மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தளமேடையை தோற்றுவிப்பதே இக்குழுவின் நோக்கமாகும். தொழில்சார் ரீதியான புகைப்படவியலாளர்களிடமிருந்து புகைப்படவியல் சார்ந்த பயனுள்ள ஆலோசனைகள் மற்றும் நுட்பங்களை குழும உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள முடிவதுடன் வியப்பூட்டும் பரிசுகளை வெல்வதற்கு வாய்ப்புக்களை வழங்கும் ஆர்வமூட்டும் சில போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பும் கிட்டியுள்ளது.

“Huawei Nova Series Sri Lanka” என்ற பெயரிலான முகநூல் பக்கம் ஏற்கனவே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் 1,200 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இக்குழுவில் இணைந்துள்ளனர். Huawei தொலைபேசி சாதனத்தைக் கொண்டுள்ள, புகைப்படவியலில் ஆர்வம் கொண்ட வாடிக்கையாளர்கள் அனைவரையும் முகநூல் வழியாக ‘Huawei Nova 2i Series Sri Lanka’  முகநூல் பக்கத்துடன் இணைந்து, உங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பிக்குமாறு Huawei அழைப்பு விடுகின்றது.