யாழில் மானிப்பாய் பகுதியில் இருவேறு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் பலத்த காயத்திற்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Image result for வாள்வெட்டு virakesari

மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் 49 வயதான கந்தையா திருநல்காந்தன் என்பவர் மீது வாள் வெட்டை மேற்கொண்டு விட்டு ஸ்தலத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மானிப்பாயில் பிறிதொரு பகுதியிலும் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.

24 வயதான நாகமணி ஜனீஸ்வர் என்பவரே வாள்வெட்டிற்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.