இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் கலந்து கொள்ளுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு உத்தியோகபூர்வமாக இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்த முக்கோண கிரிக்கெட் போட்டித் தொடர் இடம்பெறவுள்ளது.

இப் போட்டித் தொடரில் பங்களாதேஷ், இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

இருபதுக்கு - 20 போட்டிகள் யாவும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.