கிரிக்கெட் ஜாம்பவான் மறைந்த டொன் பிராட்மனின் சாதனையொன்றை விராட் கோலி முறியடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியொன்றில், அணித் தலைவராகக் களமிறங்கி எட்டு முறை நூற்றைம்பது ஓட்டங்களைக் குவித்தவர் பிராட்மன்.

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, கோலி 153 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இது, டெஸ்ட் அணித் தலைவராக அவர் பெற்ற ஒன்பதாவது நூற்றைம்பது ஓட்டங்களாகும். இதன்மூலம், பிராட்மனின் சாதனையைச் சமன் செய்துள்ளார் கோலி.

டெஸ்ட் அணித் தலைவராக நூற்றைம்பது ஓட்டங்கள் கடந்தோர் பட்டியலில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் ஏழு 150 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.