இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவிலுள்ள பாரம்பரிய கடல்சார் நூலகத்தில் இன்று திடீரென்று தீ பரவியதன் காரணமாக அந்நூலத்திலிருந்த அரிய கடல் சார்ந்த வரலாற்று நூல்கள் மற்றும் அரிய கலைப்பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

மேற்படி நூலகத்தில் தீ பரவ முற்பட்டபோது அந்நூலக ஊழியர்களும், பார்வையாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் அனைவரும் எந்தவித ஆபத்தின்றி தப்பியுள்ளதாக தீயணைப்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

நூலகத்தில் பரவிய தீயைத் தொடர்ந்து நூலகக் கட்டடத்தில் பாரிய கரும்புகை படிந்து காணப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தீயணைப்புப் படையினரின் உதவியுடன் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நூலகத்தில் தீ பரவியமைக்கான விசாரணையை அந் நாட்டு பொலிஸார்  ஆரம்பித்துள்ளனர்.