இன்றைய திகதியில் இளம் பெண்களுக்கு அதிலும் பாடசாலை மற்றும் கல்லூரியில் பயிலும் பெண்களுக்கு பெரிய தொல்லையாக மாறிவிட்டது அவர்களின் முகத்தில் தோன்றும் பருக்கள்.

மலசிக்கல், போதிய அளவிற்கு தண்ணீர் அருந்தாமை, மாதவிடாய் சுழற்சியில் சிக்கல், அகால வேளையில் எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை சாப்பிடுவது , மன உளைச்சல் என பல காரணங்களால் முகத்தில் பருக்கள் தோன்றுகின்றன.

இதற்கு இன்றைய பெண்கள் பெரும்பாலும் தங்களின் தோழி அல்லது உறவினர் சொல்லும் மருத்துவ குறிப்பு (?) களைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவர்கள் பருக்களை உரிய தோல் நோய் மருத்துவர்களிடம் காண்பித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெறவேண்டும்.

முகத்தில் பருக்கள் வந்து அதனை சரியான முறையில் நீக்காமல் இருந்து, அப்பகுதியின் தோல்கள் கருத்துப் போய் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த தோல்பகுதியில் Dermabrasion என்ற சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இது முகத்தில் பருக்களை மட்டும் நீக்கும் வகையில்  அப்பகுதியில் செய்யப்படும் பாலீஷ் போன்ற சிகிச்சை. இதனை தற்போது பெண்களைப் போல் ஆண்களும் செய்து கொள்கிறார்கள். ஒரு சிலருக்கு அவர்களின் ஸ்கின் டோன் அதாவது சருமத்தின் தோற்றம் சீராக இல்லாமல் இருக்கும். அவர்களுக்கும் இந்த Dermabrasion சிகிச்சை பலனளிக்கும்.

டொக்டர் சிவக்குமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்