இன்றைய திகதியில் கல்லூரியில் படிக்கும் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் உடல் தோற்றத்தின் மீது அதிகளவு அக்கறைக் காட்டி வருகிறார்கள். ஆண்களாக இருந்தால் சிக்ஸ் பேக் பெண்களாக இருந்தால் சைஸ் ஜீரோ என்ற அளவில் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காக அவர்கள் நிறைய தேடல்களில் ஈடுபடுகிறார்கள். யாராவது ஏதேனும் டயட் எனும் உணவுக்கட்டுப்பாட்டைப் பற்றி சிலாகித்து சொன்னால் உடனே அதனை முயற்சி செய்கிறார்கள். இந்த வகையில் அண்மையில் பேலியே டயட் எனப்படும் புரதச்சத்தை முன்னிலைப்படுத்தும் உணவு கட்டுபாட்டு வகை பிரபலமாகி வருகிறது.

இந்நிலையில் திரை நட்சத்திரங்களின் ஆரோக்கிய நிலை குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் இளைய தலைமுறையினர். நடிகர் சூர்யாவின் ஆரோக்கிய ரகசியம் குறித்து அவரிடம் கேட்ட போது,‘வெள்ளைச்சர்க்கரை, அரிசியில் தயாரான உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், வெள்ளை ரொட்டி, ஊறுகாய் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துவிடுகிறேன். வேக வைத்த கோழியிறைச்சி, மீன், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை மட்டும் சாப்பிடுகிறேன். தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். பிறகு பழங்கள், வேக வைத்த காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடுகிறேன். வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் உப்பு சேர்க்காத உணவை சாப்பிடுகிறேன்.’ என்றார்.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்