கிளிநொச்சி - வட்டக்கச்சி, பன்னங்கண்டி பாலத்தில் இருந்து இன்று காலை மோட்டார் சைக்கிளோடு இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனுரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரின் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.