ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்குஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் பிரதமர் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.