உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட எல்.டி.பி தெஹிதெனியவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ப்ரீதி பத்மன் சூரசேனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்த நிகழ்வு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்றது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக செயற்பட்ட எல்.டி.பி தெஹிதெனிய உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த பதவிக்கு ப்ரீதி பத்மன் சூரசேன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.