போதைப்பொருள் அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

Published By: Priyatharshan

15 Jan, 2018 | 02:59 PM
image

பெருந்தொகையான கொக்கெய்ன் போதைப்பொருள் அழிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆரம்பமாகியது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 928 கிலோகிராம் நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள்களே இவ்வாறு அழிக்கப்படுகின்றன.

இந்த அழிக்கும் நடவடிக்கை கட்டுநாயக்கவில் இடம்பெற்று வருகின்றது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட 928 கிலோ கிராம் கொகேன் போதைப்பொருளை பகிரங்கமாக அழித்தொழிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கண்காணிப்பின் கீழ் இன்று முற்பகல் கட்டுநாயக்க முதலீட்டு அபிவிருத்திச் சபை வளாகத்தில் இடம்பெற்றது.

கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் பகிரங்கமாக அழித்தொழிக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த கப்பல் ஒன்றிலிருந்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் இப்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், இதன் பெறுமதி 1000 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்.

பொலிசாரினால் கைப்பற்றப்படும் போதைப்பொருள்களுக்கு என்ன நடக்கிறது என்று பொதுமக்களிடம் இருந்துவந்த சந்தேகத்திற்குத் தீர்வாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், கைப்பற்றப்படும் போதைப்பொருள் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பகிரங்கமாக அழித்தொழிக்கும் முறைமையொன்றை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இந்த ஆண்டு சுற்றிவளைப்புகளை மேலும் அதிகரித்து போதைப் பொருளை நாட்டிலிருந்து ஒழித்துக்கட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, தலதா அத்துகோரல, இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே, அபாயகர ஔடதக் கட்டுப்பாட்டு தேசிய சபையின் தலைவர் பேராசிரியர் ரவீந்திர பெர்ணாந்து, போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் டாக்டர் சமந்த கிதலவஆரச்சி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலதிக செய்திகளுக்கு http://www.virakesari.lk/article/29232

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08