இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க வர்த்தக சம்மேளனம் (AmCham) ஆகியன இணைந்து கொழும்பில் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் வர்த்­தகக் கண்­காட்­சி - 2015 ( US Trade Show -2015 ) ஒன்றை நடத்தி வருகின்றன.

US Trade Show 2015 கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர்  அதுல் கேஷெப் ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை, ஐக்­கிய அமெ­ரிக்­காவின் வர்த்­தகக் கண்­காட்­சியை நேற்று கல­தாரி ஹோட்­டலில் திறந்து வைத்து உரை­யாற்றிய  இலங்­கை மற்றும் மலைதீவுக்கான அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேஷெப் தெரி­விக்கையில்,

அமெ­ரிக்கா இலங்­கையில் முத­லி­டு­வ­தற்கு இதுவே தகுந்த காலம். வர்த்­தக கொடுக்கல் - வாங்­கல்­களை இல­கு­ப­டுத்தி தர­மான பொருட்­களை விநி­யோ­கிக்க அமெ­ரிக்க அரசு எதிர்­பார்த்­துள்­ளது.

இலங்­கைக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான வர்த்­தக வியா­பாரம் நீண்ட வர­லாற்றைக் கொண்­டது. அமெ­ரிக்­காவின் உற்­பத்தி பொருட்­க­ளுக்கு இலங்­கையில் சிறந்த கேள்வி நில­வு­கின்­றது. 

தர­மான பொருட்­களை வழங்க வேண்­டு­மென்­ப­திலும் அமெ­ரிக்கா அரசு உறு­தி­யா­க­வுள்­ள­துடன் பொருட்­களின் வர்த்­தகப் பரி­மாற்­றத்தில் சிறந்த நுட்­பங்­களை கையாண்டு இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான நிலை­யான உற­வு­களை பேண இதுவே தகுந்த கால­மாகும்.

அமெ­ரிக்க வர்த்­தக நிறு­வ­னங்கள் சிறந்த சமூகப் பொறுப்­பு­ணர்­வோடு செயற்­பட வேண்­டி­ய­தோடு புதிய வர்த்­தகப் பொருட்­களை அறி­மு­கப்­ப­டுத்தி தர­மான சந்­தை­யாக இலங்­கையை மாற்­ற­ம­டைய செய்ய வேண்டும். இதற்­கென பல்­வேறு முத­லீ­டு­களை அறி­மு­கப்­ப­டுத்­தவும் எதிர்ப்­பார்த்­துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.