மாத்தறை -வெலிகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த  8 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 8 பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சட்டவிரோத நடவடிக்கையை குறித்த 8 பெண்களும் மிக நீண்ட காலமாக நடத்தி வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

வெலிகம பொலிஸார் குறித்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு குறித்த சூதாட்ட சம்பவத்தோடு வேறு சிலரும் தொடர்பு பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.