போர்த்துக்கலில் இடம்பெற்ற தீ விபத்தையடுத்து அங்கு ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தீ விபத்தானது போர்த்துக்கல் நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள வில்லா நோவா டா ரெயின்ஹா நகரில் உள்ள இரண்டு மாடி ஓய்வு விடுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

வாரவிடுமுறையைக் களிக்க பொதுமக்கள் அங்கு கூடியிருந்த போதே எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மக்கள் பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர். இதன்காரணமாக அப்பகுதியில் சனநெரிசல் ஏற்பட்டது. 

இந்த சனநெரிசலில் சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.