மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை ஏறாவூர்ப் பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.

மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரைக் கண்டதும் மரக்குற்றிகளையும் துவிச்சக்கர வண்டிகளையும் கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

6 மற்றும் 11 அடி  நீளமாக அறுக்கப்பட்ட  40 தேக்கு மரக்குற்றிகளும் இரண்டு துவிச்சக்கர வண்டிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வந்தாறுமூலை - உப்போடை வயற்பிரதேச வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஏறாவூர் பொலிஸாரே குறித்த மரக்கடத்தலை முறியடித்துள்ளனர். 

சந்தேக நபர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் நடைபெறுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.