மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டியில் பாதசாரி ஒருவர் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு - கொம்மாதுறை பிரதான வீதியில் நேற்று மாலை 5 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில், செங்கலடி, கொம்மாதுறையைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (63 வயது)  என்பவரே பலியானவராவார்.

சந்திவெளி வைத்தியசாலையிருந்து நோயாளர் ஒருவரை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது கொம்மாதுறை பிரதான வீதியிலுள்ள மஞ்சள் கடவையை கடக்க முற்படுகையிலேயே உயிரிழந்த நபர் அம்பியூலன்ஸ் வண்டியுடன் மோதுண்டதில்  ஸ்தலத்திலேயே உயரிழந்துள்ளார்.

 இவ் விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.