வவுனியாவில் அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றில் விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பண்டாரிக்குளம் பகுதியில் தமிழரசுக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலகத்திலே  இவ்வாறு ஒலிபரப்பப்பட்டுள்ளது. 

தேர்தல் காலத்தில் இவ்வாறு புரட்சிப்பாடல்களை ஒலிபரப்பி தாங்கள் விடுதலை உணர்வாளர்கள் என மக்களுக்குத் தெரியப்படுத்தி வாக்குவேட்டை இடம்பெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்திலும் இவ்வாறு புரட்சிப்பாடல்களை ஒலிபரப்பி தேர்தலில் வாக்கு பெறும் உத்திகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் இவ்வாறு விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்களை தேர்தல் காலங்களில் ஒலிக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.