பொலிஸ் நிலையம் அமைக்கும் நோக்கில் குவிக்கப்பட்டிருந்த மணலை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மன்னார், மடு, பெரிய பண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள  மாவீரர் துயிலுமில்லத்துக்கு முன் பொலிஸ் நிலையம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சில மாதங்களுக்கு முன் பெருந்தொகை மணல்கள் பறிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை சில தினங்களுக்கு முன் இரவோடு இரவாக மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக மடுப் பொலிசார் தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் பறிக்கப்பட்டிருந்த மணல் திருடப்பட்டுள்ளது. திருடர்களைத் தேடி வருவதாகவும் மிகவிரைவில் அவர்களைக் கைது செய்வோம் எனத் தெரிவித்தனர்.