அமெரிக்காவில், கடந்த வாரம் வெல்லப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் லொத்தர் பரிசுக்குச் சொந்தக்காரர் 20 வயது இளைஞர் என்று தெரியவந்துள்ளது.

மெகா மில்லியன்ஸ் என்ற லொத்தர் சீட்டிழுப்பு கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்றது. இதில் மெகா பரிசான 450 மில்லியன் டொலர்கள் வெல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும், நேற்று (12) வரை அந்தப் பரிசுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முன்வரவில்லை.

இந்த நிலையில், உரிய அதிகாரிகளைச் சந்தித்த ஷேன் மிஸ்லர் (20) என்ற இளைஞர் வெற்றிபெற்றது தாமே என்று கூறி, வெற்றிபெற்ற அந்தச் சீட்டையும் கையளித்தார்.

தனது சீட்டு வெற்றிபெற்றதை அறிந்ததும், தனது முக நூல் பக்கத்தில் “ஓ மை கோட்” (Oh. My. God) என்று மட்டுமே தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியதாகவும் மிஸ்லர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வெல்லப்பட்ட மூன்றாவது அதிகூடிய பணப்பரிசு இது!