வியாபார நோக்கமாக டெல்லி சென்ற 52 வயது அமெரிக்கப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற கூகிள் நிறுவன அதிகாரியான 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

வியாபார நோக்கமாக சென்ற அவர், அங்கு ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினார். கடந்த எட்டாம் திகதி, கூகிள் நிறுவன ஊழியரான இளைஞரை ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் அமெரிக்கப் பெண் சந்தித்தார். 

அவரை தன் அறைக்கு மது அருந்த வருமாறு குறித்த இளைஞர் கேட்டிருக்கிறார். அதை ஏற்று அங்கு சென்ற அப்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த மதுவை ஊற்றிக் கொடுத்த இளைஞர், அந்தப் பெண் அரை மயக்கத்தில் இருக்கும்போது அவரிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளார்.

எனினும் சுதாரித்துக்கொண்ட அப்பெண், இளைஞரைத் தள்ளி வீழ்த்திவிட்டு அறையை விட்டு மட்டுமன்றி, ஹோட்டலை விட்டே வெளியேறிவிட்டார்.

விடயத்தை அப்படியே விட்டுவிட அவர் நினைத்தபோதும் நண்பி ஒருவர் அளித்த தைரியத்தின் பேரில், அந்த இளைஞர் மீது பொலிஸிலும் நீதவான் நீதிமன்றிலும் புகாரளித்தார்.

குறித்த இளைஞரைக் கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.