கம்பஹா மாவட்டத்தில் நேற்று (12) வீசிய மினி சூறாவளியால் சுமார் 300 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வல்பிட்ட, கட்டுகிரிந்த, சிறிகம்பாத்த, திக்லந்த, அலுகொல்ல ஆகிய பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஆறு மணியளவில் வீசத் தொடங்கிய இந்தக் கடுங்காற்று, சில நிமிடங்களில் மினி சூறாவளியாக உருவெடுத்தது.
இதையடுத்து, அப்பகுதிவாசிகள் அடைக்கலம் தேடி பாதுகாப்பான இடங்களுக்கு பெயரத் தொடங்கினர். இதனிடையே இடியுடன் கூடிய மழையும் பெய்ய ஆரம்பித்தது.
காற்றில் மரங்கள் முறிந்து வீடுகள் மீது விழுந்தன. இதில் 300க்கும் அதிகமான வீடுகள் கடுமையாகச் சேதமுற்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது.
பொலிஸ் மற்றும் இராணுவம் மூலம் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதாக அப்பகுதியின் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, திவுலப்பிட்டிய பகுதியில் இதே மினி சூறாவளியால் 659 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2976 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM