மொறட்டுவ, ராவத்தாவத்தையில் வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்று நேற்று (12) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி கொலை பற்றிய தகவல் ஒன்று 119 அவசர இலக்கம் மூலம் தமக்குக் கிடைக்கப் பெற்றதாகவும் அதன்படி குறித்த முகவரிக்குச் சென்றபோது, பெண் ஒருவரின் உயிரற்ற உடலையை கைப்பற்ற முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டே அப்பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கொலையாளிகள் குறித்து தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

நாற்பத்து நான்கு வயதான அப்பெண்ணின் சடலம் பாணந்துறை வைத்தியசாலையில் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.