ட்ரம்ப்புடனான பாலியல் உறவு குறித்து வெளிப்படையாகப் பேசாமல் இருப்பதற்காக, நீலப் பட நடிகை ஒருவருக்கு ஒரு இலட்சத்து முப்பதாயிரம் டொலர் வழங்கப்பட்டதாக, அமெரிக்காவின் முக்கிய பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிக்கான 2016ஆம் ஆண்டு தேர்தல் காலப் பகுதியில், வேட்பாளராக ட்ரம்ப் களமிறங்கியபோதே இந்த ‘முன்னெச்சரிக்கை’ நடவடிக்கையை அவர் எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணத்தை, ட்ரம்ப்பின் சட்டத்தரணி ஒருவர் மூலம் ஸ்டெபனி க்ளிஃபோர்ட் என்ற அந்த நடிகைக்குக் கொடுத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெலனியாவைத் திருமணம் செய்த மறு ஆண்டே - அதாவது, 2006ஆம் ஆண்டே ஸ்டெபனியுடன் ட்ரம்ப் உறவு வைத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் மூன்றாவது மனைவியே மெலனியா என்பது குறிப்பிடத்தக்கது.