நீண்ட காலமாக அமுலில் இருந்த பாலின வேறுபாடுகளைக் களையும் முயற்சியில் சவுதி அரேபியா இறங்கியுள்ளது. அதில் ஒரு கட்டமாக, உதைபந்தாட்டப் போட்டியொன்றைக் கண்டு ரசிக்க பெண்கள் விளையாட்டரங்கில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் மீது கடுமையான விதிகளை விதித்து வந்த சவுதி அரேபியா இதற்கு முன்னதாக, பெண்கள் வாகனம் செலுத்த அனுமதித்தும் திரையரங்குகளுக்கு அனுமதித்தும் புதிய சட்டம் இயற்றியுள்ளது.

தலைநகர் ஜெத்தாவில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியைக் கண்டு ரசிக்க முதன்முறையாக வந்த ரசிகைகள், தமது பாரம்பரிய ‘பர்தா’ ஆடையுடன் குளிர்க் கண்ணாடிகளையும் அணிந்திருந்தனர்.

சவுதியின் முடிக்குரிய இளவரசராக கடந்த வருடம் மொஹமட் பின் சல்மான் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே நாட்டின் கடுமையான சட்டங்கள் பலவும் இலகுபடுத்தப்பட்டு வருகின்றன.