தான் கூறியதாக சர்வதேசத்தால் விமர்ச்சிக்கப்படும் குறித்த மிக மோசமான அவதூறு சொல்லை தான் பிரயோகிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

குடியேற்றவாசிகள் குறித்த ட்ரம்பின் பேச்சு சர்வதேசத்தின் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் ட்ரம்ப் நேற்று  வெளியிட்ட டுவிட் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"குடியேற்றவாசிகள் தொடர்பான தனது வார்த்தை பிரயோகம் கடினமானது என்றபோதிலும், சர்வதேசத்தால் விமர்சிக்கும் மிகமோசமான வார்த்தையை தான் பிரயோகிக்கவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம்  இடம்பெற்ற குடியேற்றவாசிகள் தொடர்பான சந்திப்பொன்றின்போது ட்ரம்ப்,

அமெரிக்கா சேரிப்புற நாடுகளிலிருந்து வரும் குடியேற்றவாசிகளுக்கு பதிலாக நோர்வே போன்ற நாடுகளிலிருந்து வரும் குடியேற்றவாசிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அங்கு கூடியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக  வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.