பல மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பிடம் பாழடைந்த நிலையில்!!!

Published By: Sindu

13 Jan, 2018 | 10:02 AM
image

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாவத்துறை பகுதியில் பல மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள், பஸ் தரிப்பிடம் மற்றும் கடைத்தொகுதி என்பன பல வருடங்களாக மக்கள் பாவனை இன்றி காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பஸ் தரிப்பிடத்தில் பஸ்கள் எவையும் தரித்து நிற்பதில்லை எனவும்,குறித்த பஸ் தரிப்பிடம் கடந்த 7 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட போதும் உரிய முறையில் திறப்பு விழா செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு விடவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் வீதியில் நின்றே பஸ்ஸில் ஏறி போக்குவரத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பஸ் தரிப்பிடத்தை சூழ அமைக்கப்பட்ட முக்கிய வர்த்தக நிலைய தொகுதியும் இது வரை திறக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட முசலி பிரதேச சபை தலைவரின் ஆட்சிக்காலத்தில் குறித்த பயணிகள், பஸ் தரிப்பிடம்,மற்றும் கடைத்தொகுதி அமைக்கப்பட்டது. 

ஆனால் இன்று வரை அவை உரிய முறையில் பயண்படுத்தப்படாத நிலை காணப்படுகின்றது என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திற்கு வரும் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பஸ் தரிப்பிடத்தை வைபவ ரீதியாக திறந்து வைப்பதாக தெரிவித்த போதும்,இது வரை திறந்து வைக்கப்படவில்லை.

குறித்த தரிப்பிடமானது சிலாவத்துறை பஸார் பகுதியில் அமைக்கப்படாமல் தூர இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் பல மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு கால்நடைகளின் உறைவிடமாக காணப்படும் குறித்த பஸ் தரிப்பிடம் மற்றும் கடைத்தொகுதியை இது வரை திறந்து மக்களின் பயண்பாட்டிற்கு விடாததன் காரணத்தினால் இப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதோடு,பயணிகள் மற்றும் பஸ் தரிப்பிடம் பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த பயணிகள்,பஸ் தரிப்பிடம் மற்றும் கடைத்தொகுதியை உடனடியாக திறந்து மக்களின் பயண்பாட்டிற்கு கையளிக்குமாறு அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02