கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணியின் முதற்கட்டம் இன்று நிறைவுற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்படி விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த 58 பாடசாலைகளும் எதிர்வரும் திங்களன்று, முதல் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மொத்தமாகக் கிடைக்கப் பெற்றுள்ள சுமார் பதினாறு மில்லியன் விடைத் தாள்களும் இரண்டு கட்டங்களாகத் திருத்தப்பட்டு வருகின்றன. அதில் முதற்கட்டம் தற்போது முடிவடைந்திருக்கிறது.

மொத்தமாக 62 ஆயிரம் ஆசிரிய, ஆசிரியைகள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.