வெளிநாட்டு மதுவகைகள் மற்றும் சிகரெட்டுகளை முறையான அனுமதிப் பத்திரங்களின்றி ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சுங்கத் துறை அதிகாரிகள் இருவர், கொழும்பு - கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்பை விசேட பொலிஸ் குழுவொன்று நடத்தியுள்ளது.

இதன்போது, குறித்த வாகனத்தில் ஒன்பதாயிரம் வெளிநாட்டுச் சிகரெட்டுகள் மற்றும் வெளிநாட்டு மதுப் போத்தல்கள் நூற்று எட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சுங்கத் துறைக்குச் சொந்தமான வாகனத்திலேயே இந்தப் பொருட்களை விற்பனைக்காக குறித்த அதிகாரிகள் எடுத்துச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.