(ஆர்.யசி )

இலங்கையின்  காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான நகர்வுகளை இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இலங்கை அரசாங்கம்  முன்னெடுக்கவுள்ளது. இந்தியாவின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்  ( 6.9 பில்லியன் ) நிதி உதவியில் பிராந்திய மற்றும் வணிக துறைமுகமாக புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை இந்திய வர்த்தக உறவை பலப்படுத்தும் வகையில்  இந்திய அரசாங்கத்தின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் ( 6.9 பில்லியன் ) முதலீட்டுடன் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கான உடன்படிக்கையும் இரு நாட்டு பிரதிநிதிகளினால் புது டெல்லியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.  என்பதை இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை மற்றும் இந்திய நாடுகளின் முழுமையான வர்த்தக வணிக நகர்வுகளை மையமாகக்கொண்டு இயங்கும் வகையில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.