உமாஓயா பல்நோக்கு வேலைத்திட்டத்தினால் பண்டாரவளைப் பகுதியில் மேலும் மூன்று இடங்களில் நிலம் தாழிறங்கும் நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது. 

பண்டாரவளைப் பகுதியிலுள்ள மெதபேருவ என்ற இடத்திலும் ஹீல்ஓயா ஆற்றுப்பகுதியிலும் மேட்டு நிலமொன்றிலுமே இவ்வாறு நிலம் தாழிறங்கியுள்ளது.

 

இவ்வாறு நிலம் தாழிறங்கியுள்ள  இடங்களில் நீர் நிரம்பியுள்ளதுடன் நிரம்பிய நீர் பூமிக்கடியில் செல்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக, ஒவ்வொரு பகுதியிலும் 20, 18, 15 அடி என்ற வகையில் நிலம் தாழிறங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில்  புவி சரிதவியல், கட்டிட ஆராய்ச்சித் திணைக்கள அதிகாரிகள் நிலம் தாழிறங்கியமை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.