குதிரையொன்றை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18  வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க அலபமா பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச  ஊடகங்கள்   நேற்று  செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஐவிங்டன் பிராந்தியத்தைச் சேர்ந்த  டானியல் பென்னட் என்ற இளைஞனே போல்லி என்றழைக்கப்படும் 20  வயதான குதிரையை பாலியல்  துஷ்பிரயோகம்  செய்துள்ளான்

இந் நிலையில்  அந்தக் குதிரையின் உரிமையாள ரான பிரான்சிஸ் ஜேன்ஸ்  டானியலை  கையும் களவுமாக துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருந்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். டானியல் அந்தக் குதிரையை சுமார் 10  தடவைகள் வரை பாலியல்    துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளமைக்கான சான்றுகள் உள்ளதாக  பிரான்சிஸ்  ஜேன்ஸ்   தெரிவித்தார். இந்நிலையில் மேற்படி வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 18  ஆம் திகதி  இடம்பெறவுள்ளது.