இலங்கை விளை­யாட்­டுத்­து­றையில் கடந்த காலங்­களில் பல சர்ச்­சை­களை உரு­வாக்­கிய தேசிய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 23ஆம் திகதி நடை­பெற முடி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.

ஆனாலும் தேசிய ஒலிம்பிக் சங்கத் தலை­வ­ராக கடந்த 22 வரு­டங்­க­ளாக இருந்­து­வந்த ஹேம­சிறி பெர்னாண்டோ இம்­முறை தேர்­தலில் போட்­டி­யிடப் போவ­தில்லை என்று அறி­வித்­துள்ளார்.

இவர்கள் சார்­பாக முன்னாள் டென்னிஸ் வீரரும் சிறந்த நிர்­வா­கி­யு­மான சுரேஷ் சுப்­ர­ம­ணியம், ஒலிம்பிக் குழு தேர்வில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக தெரி­வித்தார். 

ஒலிம்பிக் சங்­கத்தின் செய­லாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா உட்­பட தலைவர் பத­விக்கு போட்­டி­யிடும் டென்னிஸ் சம்­மே­ள­னத்தின் முன்னாள் தலைவர் சுரேஷ் சுப்­ர­ம­ணியம் ஆகியோர் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே தான் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக சுரேஷ் சுப்­ர­ம­ணியம் அறி­வித்தார்.

தேசிய ஒலிம்பிக் குழு­வா­னது சர்­வ­தேச ஒலிம்பிக் குழுவின் ஆலோ­ச­னையின் கீழ் செயற்­ப­டு­வ­தோடு, குழு தேர்­வா­னது, ஒலிம்பிக் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு உட்­பட்­ட­தாக இருத்தல் வேண்டும். 

சிரேஷ்ட டென்னிஸ் முகா­மைத்­து­வ­ரான இவர், 1981ஆம் ஆண்டு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆகிய இரண்டு பிரி­வுகளிலும், இலங்­கையின் முத­லாம்­தர டென்னிஸ் வீரராகத் திகழ்ந்தார். 

ஒலிம்பிக் சங்கத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது குறித்து சுரேஷ் சுப்­ர­ம­ணியம் தெரி­விக்­கையில், எப்­போதும் சிறந்த முகா­மைத்­து­வத்தை வழங்கி, திற­மை­மிகு வீரர்­களை பலப்­ப­டுத்­து­வ­தற்­கான பல செயற்­றிட்­டங்­களை நான் முன்­னெ­டுக்­க­வுள்ளேன். மேலும் எதிர்­கா­லத்தில் நாட்­டிற்கு சிறந்த பெறு­பே­று­க­ளையும் புக­ழையும் அளிக்கும் வல்­லமை ஒலிம்பிக் குழு­வுக்கு உண்டு என நான் நம்­பு­கிறேன் என தெரி­வித்தார்.

அத்­தோடு தேர்தலில் வெல்­வ­தற்கே நாம் போட்டியிடுகிறோம். எமக்கு விளையாட்டு சங்கங்களின் ஆதரவு முழுமையாகக் கிடைத்துள்ளது. 

அதனால் நாமே ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் வெற்றியீட்டுவோம் என்று ஒலிம்பிக் சங்க செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.