யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை 3 ஆம் மற்றும் 4 ஆம் வருட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் உட் பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்படுவதாக கலைப்பீடாதிபதி நேற்று  இரவு அறிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட 3ஆம் 4ஆம் வருட மாணவர்களுக்கு இடையே நேற்று  மாலை இடம்பெற்ற கைகலப்பையடுத்தே இந்த அறிவுறுத்தல் கலைப்பீடாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.