மத்திய வங்கியின் பிணை மறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதற்காக மத்திய வங்கியின் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரினால் நேற்று இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் ஆலோசனையின் பின்னர் மத்திய வங்கியின் நிதிச்சபை 10 பக்கங்களைக்கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி போன்ற முறைகேடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் நிதிச்சபை அதில் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் முதலீட்டுத் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது நம்பகத்தன்மை மற்றும் நிர்வாகம் என்பனவற்றை தொடர்ந்தும் மேம்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.