ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் வினவப்பட்டமை தொடர்பில் உண்மை வெளியாகியது.!

By Robert

11 Jan, 2018 | 04:11 PM
image

(ஆர்.யசி)

ஜனாதிபதி தேர்தலை நடத்தும் காலத்தை அறிந்துகொள்ளவே ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் குறித்து வினவப்பட்டதே தவிர ஜனாதிபதி தொடர்ந்தும்  ஆட்சியில் நிலைத்து நிற்பதற்காக அல்ல. ஜனாதிபதி ஆட்சிக்காலம் குறைக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைய ஜனாதிபதிக்கு அது பொருந்தாது என அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த கூறினார் .

அரசியல் அமைப்பின் 19 ஆம் திருத்தம் மூலமாக ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பொருந்தும் ஒன்றல்ல. ஜனாதிபதி தேர்தலை எப்போது நடத்துவது என்ற கேள்வி எழுந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு தேர்தலை நடத்த முடியும் என கூறப்பட்ட நிலையில் சிலர் அதை மறுத்து 2021 ஆம் ஆண்டு தேர்தலை நடத்தவே அதிகாரம் உள்ளதாக கூறினார். ஆகவே அவ்வாறான ஒரு சர்ச்சையை அடுத்தே உயர் நீதிமன்றத்தின் மூலமாக அறிந்துகொள்ள இவ்வாறான ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாறாக ஜனாதிபதி ஆட்சியை தக்கவைக்கவோ அல்லது வேறு எந்த நோக்கத்தை கொண்டதல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பினால் 5  ஆண்டுகளில் தேர்தலை நடத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து கூறும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right