வாடிக்கையாளருக்கு சங்ஸ்தா சீமெந்தை INSEE சீமெந்து அன்பளிப்பு

Published By: Priyatharshan

11 Jan, 2018 | 03:30 PM
image

“யானை எடையளவுக்கு சீமெந்து” எனும் தொனிப்பொருளில் 2017 இல் முன்னெடுக்கப்பட்டிருந்த ஊக்குவிப்புத்திட்டத்தில் வெற்றியீட்டிய மீரிகம, கல்லெலிய பிரதேசத்தைச்சேர்ந்த சந்திக ராஜபக்ஷவுக்கு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான சங்ஸ்தா சீமெந்தை INSEE சீமெந்து அன்பளிப்புச்செய்திருந்தது.

இந்த பரிசை Siam City சீமெந்து நிறுவனத்தின் வணிக பணிப்பாளரும் நிறைவேற்று பதில் தலைவருமான ஜான் குனிக் வழங்கியிருந்தார். 

இந்த நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள INSEE சீமெந்தின் களஞ்சியசாலையில் அண்மையில் நடைபெற்றது.

உள்நாட்டு நிர்மாணத்துறையில் 10 வருட கால அனுபவத்தைக்கொண்டுள்ள சந்திக ராஜபக்ஷ இந்த போட்டியில் வெற்றியீட்டியமையானதுரூபவ் சந்தையில் INSEE சங்ஸ்தா முன்னணி வர்த்தக நாமமாக திகழ்வதை மேலும் உறுதி செய்துள்ளதுடன் உள்நாட்டில் காணப்படும் ஏனைய எந்தவொரு சீமெந்துடனும் ஒப்பிடுகையில் உயர் வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை ஆகியவற்றை கொண்டுள்ளது என்பவற்றை உறுதி செய்துள்ளது.

சந்திக ராஜபக்ஷ கருத்துத்தெரிவிக்கையில்,

“நான் ஒரு ஒப்பந்தக்காரர் எனும் வகையில் 11 வருடங்களுக்கு மேலாக நான் சங்ஸ்தா சீமெந்தை பயன்படுத்தி வருகிறேன். INSEE சங்ஸ்தா சீமெந்தின் உயர் வலிமை, பசுமையான தன்மை, தரம் மற்றும் செயலாற்றக்கூடிய திறன் போன்றவற்றின் காரணமாக சந்தையில் காணப்படும் மிகச்சிறந்த கொங்கிறீற் சீமெந்து வகையாக இதனை திகழச்செய்துள்ளது. மாபெரும் பரிசை நான் வெற்றியீட்டியுள்ளதையிட்டு நான் மிகவும் பெருமை கொள்கிறேன். தமது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்க INSEE சீமெந்து முன்வந்திருந்தமைக்காக நான் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

“யானை எடையளவுக்கு சீமெந்து” எனும் INSEE சங்ஸ்தா சீமெந்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வெகுமதியளிக்கும் திட்டம் 2017 ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 15 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதன் போது 45 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் 50000 ரூபா பெறுமதியான INSEE சங்ஸ்தா சீமெந்தை தினசரி வெற்றியீட்டியிருந்தனர்.

விநியோகஸ்த்தர்கள் மற்றும் மேசன்மார்கள் போன்றோர் இந்த திட்டத்தினூடாக ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

Siam City சீமெந்து நிறைவேற்று உப தலைவர் மற்றும் வணிக பணிப்பாளர் ஜான் குனிக் வெற்றியாளருக்கு வாழ்த்துத்தெரிவித்து கருத்து வெளியிடுகையில்,

 “சங்ஸ்தா நீண்ட காலமாக பாவனையிலுள்ள சீமெந்து வகையாகும். இலங்கையின் மூன்றில் ஒரு வீடு சங்ஸ்தா சீமெந்து கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனூடாக இந்த தயாரிப்பின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை வெளிப்படுகிறது. “யானை எடையளவுக்கு சீமெந்து” எனும் திட்டத்துக்கு எமக்கு கிடைத்திருந்த வரவேற்பை கண்டு நாம் வியப்படைந்திருந்தோம். புத்தாண்டிலும் எமது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி கௌரவித்து வெகுமதியளிக்க நாம் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

50 ஆண்டுகளை நிறைவு செய்யும் எய்ட்கன்...

2024-09-09 10:20:01
news-image

தாய்லாந்தில் இடம்பெற்ற 13ஆவது HAPEX மற்றும்...

2024-09-09 09:30:01
news-image

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அறிமுகமாகவுள்ள எல்.டி.எல் Holdings...

2024-09-06 16:41:54
news-image

இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC)...

2024-09-06 09:46:27
news-image

குழந்தைப் பருவ விருத்தியில் பெரும் மாற்றத்திற்காக...

2024-08-29 19:34:33
news-image

கூட்டுறவு மதிப்புச் சங்கிலி மற்றும் விநியோகச்...

2024-08-27 14:20:30
news-image

அமானா வங்கி மற்றும் Prime குரூப்...

2024-08-26 15:21:48
news-image

2024\25இன் முதலாவது காலாண்டில் வலுவான செயற்றிறனைக்...

2024-08-20 21:41:17
news-image

இலங்கையின் முதலாவது நவீன இல்லத் தொடர்மனை...

2024-08-20 15:28:49
news-image

தேயிலை ஏற்றுமதி, இறக்குமதியில் முன்னணி வகிக்கும்...

2024-08-26 14:41:55
news-image

இலங்கையின் போக்குவரத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க Plug-in...

2024-08-15 15:16:18
news-image

2024 தேசிய வணிக விசேடத்துவ விருது...

2024-08-15 14:31:40