நியூஸ்லாந்து அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முற்று முழுதாக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த அணியில் கடந்த ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடாத காரணத்தால் கேரி பேலன்ஸ், ஜெக் போல், டொம் குரான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் மார்க் ஸ்டோன் மேன் அணியில் தக்கவைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்தோடு தகராறு காரணமாக அணியில் இருந்து நீண்ட நாள் புறக்கணிக்கப்பட்டு வந்த சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இத்தொடரின் ஊடாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட், இளம் துடுப்பாட்ட வீரர் லியம் லிவிங் ஸ்டோன் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகின்றனர்.

இதன் படி இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோனி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிரோட், அலைஸ்டர் குக், மேசன் கிரேன், பென் போஃக்ஸ், லியம் லிவிங்ஸ்டோன், டாவிட் மெலன், கிரைஜ் ஓவர் டொன், பென் ஸ்டோக்ஸ், மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்