Huawei நுகர்வோர் வர்த்தகப் பிரிவு, தென் கிழக்காசியாவில் Huawei Mate 8மற்றும் Huawei GR5 ஆகிய 2 பிரதான நவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

11 சந்தைகளிலிருந்து 500 இற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மற்றும் Huawei வர்த்தகநாமத் தூதுவர்களுடன் அறிமுக நிகழ்வு பாங்கொக் நகரில் இடம்பெற்றது.  

முன்மாதிரியான வன்பொருள் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள Mate 8 ஆனது Kirin 950 chipset இல் தொழிற்படும் முதலாவது ஸ்மார்ட்போன் உற்பத்தியாக அமைந்துள்ளதுடன், Kirin 925 உடன் ஒப்பிடுகையில் 100 சதவீதம் வரை அதிகரித்த CPU மேம்பாட்டு வலு, 125 சதவீதம் வரை அதிகரித்த GPU செயல்திறன் மற்றும் 70 சதவீதம் வரை அதிகரித்த மின்வலு பாவனைத் திறனையும் கொண்டுள்ளது.

 4 x A72 2.3 GHz processors மற்றும் 4 x A53 1.8 GHz processors மூலமாக மின்வலு பாவனைத் திறன் மற்றும் உயர் தொழில்நுட்ப செயல்திறன் ஆகியவற்றை சீராக்கும் வகையில் இந்த சாதனம் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.  

Huawei நுகர்வோர் வர்த்தகப் பிரிவின் தென்கிழக்கு ஆசியாவிற்கான தலைமை அதிகாரியான திரு. தோமஸ் லியு குறிப்பிடுகையில் 

“2015 ஆம் ஆண்டை சாதனை படைத்த ஆண்டாக மாற்றியமைத்த Huawei, அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 70% வருமான அதிகரிப்பை ஈட்டி, தென் கிழக்கு ஆசியாவில் வளர்ச்சிக்கான ஒரு உறுதியான அடித்தளத்தை இட்டுள்ளது. 

2015 ஆம் ஆண்டில் சர்வதேசரீதியாக நாம் 108 மில்லியன் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ள நிலையில் எமது வருமானமும் 20 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது. உலகில் முதல் மூன்று ஸ்தானங்களைப் பிடித்துள்ள ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களுள் ஒன்றாக நாம் தற்போது திகழ்ந்து வருகின்றோம்” என்று கூறினார்.   

உலகில் அதி விரைவான பெறுபேற்றுத்திறனை வெளிப்படுத்தி வந்துள்ள Huawei, தனது உற்பத்தி ஒவ்வொன்றும், ஒவ்வொரு சந்தைப் பிரிவுக்கும் மிகச் சிறந்த தெரிவாக அமைவதை உறுதிப்படுத்தும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி வழங்கல் அணுகுமுறையைப் பின்பற்றி வருகின்றது. 

வேறுபட்ட நுகர்வோருக்கு தீர்வளிக்கும் வகையில் வியக்கவைக்கும் பெறுபேற்றுத்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் பட்டரியுடன் புதிய ஒப்பீட்டு தர நியமமாக உருவெடுத்துள்ள Huawei Mate 8 ஆனது இன்றைய காலத்தில் தொழில் சார் துறையினருக்கு எங்கிருந்தும் இணைப்பில் இருப்பதற்கான “வியாபாரத்தின் புதிய நவீன பாணி” என்ற மகத்துவத்தைக் கொண்டுள்ளது. மற்றுமொரு திறன்மிக்க உற்பத்தியான Huawei GR5, Gஉற்பத்தி வரிசை ஸ்மார்ட்போன்கள் மத்தியில் மிகவும் பிந்திய அறிமுகமாக அமைந்துள்ளதுடன், கச்சிதமான விரல் அடையாள இனங்காணல் தொழில்நுட்பம், அதிசிறந்த கமரா மற்றும் அதிசிறந்த முகத்திரையுடன் இளம் தலைமுறையினருக்கான விசேட வடிவமைப்பாகவும் அமைந்துள்ளது. 

4000mAh உயர் அடர்த்தியுடைய பட்டரியைக் கொண்டுள்ள Mate 8தொழிற்துறையில் முன்னிலை வகிக்கும் மின்வலு பாவனைத்திறனுடன், வழமையான பாவனையின் போது இரு தினங்களுக்கு நீடித்து உழைக்கும் பட்டரி வலுவையும் கொண்டுள்ளது. மிக விரைவாக மாற்றம் கண்டுவருகின்ற தொழில்நுட்ப உலகில் இத்தொலைபேசி ஒரு நாள் பாவனைக்குத் தேவையான பட்டரி மின்வலுவை வெறும் 30 நிமிடங்களில் சார்ஐ் செய்து கொள்ள முடியும். இது Apple iPhone 6s Plus தொலைபேசியுடன் ஒப்பிடுகையில் 105 சதவீதம் வேகம் கூடியது. 

மேலும், வழமையான பாவனையாளர்கள் சார்ஐ் இன்றி 2.36 தினங்களுக்கு தமது தொலைபேசியை உபயோகிக்க முடியும். அடிக்கடி தொலைபேசியை உபயோகின்றவர்கள் சார்ஐ் செய்யாமல் 1.65 தினங்களுக்கு தமது தொலைபேசியை உபயோகிக்க முடியும். 

மேலும் கையில் தாங்கி வைத்திருப்பதில் மிகச் சிறந்த அனுபவத்தையும், மிகவும் குறைந்த அளவிலான மின்வலு பாவனையையும் வழங்கும் அதிகமான வெப்ப இழப்பு செயற்பாட்டிற்கு இடமளிக்கும் நவீன ஆறு படைகள் கொண்ட வெப்ப இயக்கவியல் தொழில்நுட்பத்தையும் Mate 8 கொண்டுள்ளது. 

அழகிய 6 அங்குல அளவுடன், வேறுபாடுகளை உயர்ந்த அளவில் காட்டும் பண்பு கொண்ட முகத்திரையுடன், நவீன, நேர்த்தியான வடிவமைப்பை Mate 8 கொண்டுள்ளது. 

மேற்பாக உடலுக்கும், முழுத் திரைக்கும் இடையிலான விகிதத்தை 83 என்ற அளவில் கொண்டுள்ளதுடன், விரும்பிய வகையில் பாரிய முகத்திரையில் எவ்விதமான விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி, நேர்த்தியான மற்றும் கைக்கு அடக்கமான தொலைபேசியாகத் திகழ்கின்றது. 2.5Dவளைந்த வைர வெட்டு கண்ணாடி மற்றும் விண்வெளி தரத்திலான அலுமினிய உலோகம் ஆகியன ஒன்றிணைந்து, அழகிய தோற்றம் மற்றும் நடைமுறை நேர்த்தி கொண்ட கலவையாக வெளிவந்துள்ளது.

தாய்லாந்து, வியட்னாம், மியன்மார், ஹொங்கொங், தாய்வான், லாவோஸ், கம்போடியா, இலங்கை, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அடங்கலாக 10 சந்தைகளில் Huawei Mate 8 மற்றும் GR5ஆகியன கிடைக்கப்பெறவுள்ளன.