(ஆர்.யசி)
பிணைமுறி ஊழலில் தாக்கம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு மக்களை பாதிக்கும் என்கிறார் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹம்மட் முஸம்மில்.
அனைத்து கட்சிகளின் கூட்டணி அமைத்த அரசாங்கத்திலேயே மத்திய வங்கி ஊழல் இடம்பெற்றுள்ளது. ஆகவே பிணைமுறி ஊழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான ஆட்சியினை முன்னெடுக்கும் அரசாங்கமே இந்த அரசாங்கமாகும். குறுகிய காலத்தில் நாட்டினை வீணாக்கிய ஒரே அரசாங்கமே இதுவேயாகும். இவர்களின் மூலமே நாடு துண்டு தண்டாக சிதறி வருகின்றது. ஒருபுறம் நாட்டினை துண்டாடும் சமஷ்டி அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது, ஜெனிவா உடன்படிக்கைகளுக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்து தமக்கு தாமே சுருக்குக் கையிற்றை போட்டுக்கொண்ட அரசாங்கம் இதுவாகும். அத்துடன் தேர்தலை பிற்போட்டு எதிர்க்கட்சியை கைக்குள் வைத்துகொண்டு முழுமையாக பாராளுமன்றத்தை கட்டுப்படுத்தி இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM