பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கான மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை - 15.01.2018 - அன்று ஆரம்பமாகும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதை முன்னிட்டு கொழும்பு, இஸிபத்தன கல்லூரியில் தேசிய நிகழ்வு ஒன்று நடத்தப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திகதிக்கு அமைவாகவே அரசு தவிர்ந்த ஏனைய அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாடசாலைகளும் புதிய மாணவர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.