மத்திய ஈரானில் இன்று (11) இலேசான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.5 ஆக அளவிடப்பட்டுள்ள இந்த அதிர்வு, தலைநகர் பாக்தாதிலும் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நில நடுக்கத்தால் பாரிய பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் நடுக்கத்தின்போது கட்டடங்கள் அதிர்ந்ததாகவும் இதனால் மக்கள் பீதியடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், கடந்த நவம்பர் மாதம் ஈரான் - ஈராக் பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர்.