சீதுவை பகுதியில் ஓய்வு விடுதி என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்த நீர்கொழும்பு பொலிஸார், அங்கிருந்த மூன்று பெண்களையும் ஆணொருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் இவர்கள் இரத்தினபுரி, கொங்கதெனியாவ, பொல்பிட்டிகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிவதாக வீட்டாருக்குத் தெரிவித்து விட்டு, இந்த தொழிலில் ஈடுபட்டு வந்ததாக, பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

பிரதேச மக்கள் மற்றும் மதகுருமார்களால் வழங்கப்பட்ட தகவல்களையடுத்தே, இந்த விபசார விடுதி முற்றுகையிடப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார், இது  தொடர்புடைய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.