கடந்த காலங்களில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் ஊடாக கைப்பற்றப்பட்ட  கொக்கெய்ன் போதைப்பொருளை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் ஊடாக கைப்பற்றப்பட்ட 900 கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளே இவ்வாறு அழிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி கட்டுநாயக்கவில் வைத்து இப் போதைப்பொருள் அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.