கடலில் அலைகள் பொங்குவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், உறை பனியில் அலைக்கு நிகரான சக்தி வாய்ந்த பனி அலைகளைப் பார்த்திருக்கிறீர்களா?

மேற்கத்தேய நாடுகள் பலவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உறை பனி காலநிலையால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நயாகரா நீர்வீழ்ச்சியே உறைந்து போயிருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.

இன்னிலையில், கடும் குளிர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் அமெரிக்காவின் கரோலினாவின் கடற்கரை ஒன்றில், இறுகிப் போயிருக்கும் பனிக் கட்டிகள், கடலடி அலைகளால் பெயர்த்தெறியப்படும் காட்சி இணைய தளத்தில் பரவி வருகிறது.

இக்காட்சியை ஒலியுடன் கேட்டுப் பாருங்கள்!