அமெ­ரிக்­கா­வுக்கு தமது பெற்­றோரால் சட்­ட­வி­ரோ­த­மாக அழைத்­து­வ­ரப்­பட்ட சிறு­வர்­களை நாடு கடத்­து­வ­தற்கு தடை விதிக்கும் நிகழ்ச்சித் திட்­டத்தை முடி­வுக்குக் கொண்டு வரும் வகையில்  அந்­நாட்டு ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பால் முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைக்கு முட்­டுக்­கட்­டை­யிட்டு  அந்­நாட்டு நீதி­ப­தி­யொ­ருவர் தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம்  ட்ரம்ப் சிறு­வர்­க­ளாக அமெ­ரிக்­கா­வுக்கு வந்­த­வர்­க­ளுக்­கான  ஒத்­தி­வைக்­கப்­பட்ட திட்­டத்தை (டகா)  இரத்துச் செய்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் சான் பிரான்­சிஸ்கோ பிராந்­திய நீதி­ப­தி­யான வில்­லியம் அல்ஸப்,  அந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில்  வழக்குத் தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் அதனை இரத்துச் செய்ய முடி­யாது எனத் தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி பராக்  ஒபாமா காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட மேற்­படி நிகழ்ச்சித் திட்­ட­மா­னது சுமார் 800,000  பேருக்கு அமெ­ரிக்­காவில் கல்­வியைத் தொட­ரவும் பணி­யாற்­றவும்  தற்­கா­லி­க­மாக அனு­ம­தி­ய­ளித்து அவர்­க­ளுக்கு நாடு கடத்­தப்­ப­டு­வ­தி­லி­ருந்து பாது­காப்பு அளிக்­கி­றது.

 இந்­நி­லையில் மேற்­படி திட்டம் தொடர்­பான  இறுதி தீர்ப்பு வெளி­யாகும் வரை அந்தத் திட்டம் முன்னர் உள்­ளது போன்று தொடர்ந்து அதே முறையில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என நீதி­பதி தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

இந்தத் தீர்ப்பு தொடர்பில் அமெ­ரிக்க வெள்ளை மாளிகை இது­வரை எது­வித விமர்­ச­னத்­தையும் வெளி­யி­ட­வில்லை.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை அமெ­ரிக்க ஜன­நா­யகக் கட்­சி­யி­னரும் குடி­ய­ரசுக் கட்­சி­யி­னரும் எல்லைப் பாது­காப்பு,  குடி­வ­ரவு,  விசா சீட்­டி­ழுப்பு முறைமை மற்றும்  சிறு­வ­யதில் அமெ­ரிக்­கா­வுக்கு வந்த குடி­யேற்­ற­வா­சிகள் நிலைமை என்­பன குறித்து புதிய சட்­ட­மூ­ல­மொன்றை முன்­னெ­டுக்க இணைந்து பணி­யாற்றப் போவ­தாக அறி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

மெக்ஸிக்கோ பிராந்தியத்தில் எல்லைச்

சுவரை நிர்மாணிப்பதற்கான நிதியை 

உள்ளடக்கிய எந்தவொரு சட்டமூலத் 

திற்கும் தாம் முட்டுக்கட்டைபோடப் போவதாக  ஜனநாயகக் கட்சியினர் வலி யுறுத்தி வருகின்றனர்.