புலோலி புற்றளை யோக பாடசாலையில் 2ஆவது தடவையாக நிகழ்ந்த இரு வார யோகாசன ஆசிரிய பயிற்சியை நிறைவு செய்த 15 பாடசாலைகளை சேர்ந்த 29 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் 30 .12 .2017 சனிக்கிழமை புற்றளை மகா வித்தியாலய அரங்கில் நடைபெற்றது.
யோகாசன ஆசானும் வீரக்கலைகளின் வித்தகருமான மாணிக்கம் இரத்தினசோதியின் தலைமையிலான ஆசிரியர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. சின்மயா மிஷன் யாழ் வதிவிடப் பிரதிநிதியான ஜாக்ரத சைதன்யா சுவாமிகள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்திருந்தார்.
புற்றளை சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையின் துணை அமைப்பான புற்றளை யோக பாடசாலையால் கடந்த ஆவணி பாடசாலை விடுமுறைக் காலத்தில் முதல் தடவையாக இத்தகைய பயிற்சி வழங்கி 15 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் இரண்டாவது தடவையாக கடந்த மார்கழியில் பயிற்சி வழங்கப்பட்டு நிறைவு செய்தோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
‘பாடசாலை மாணவர்களுக்கான யோகாசனம்’ எனும் திட்டத்தின்கீழ் பயிற்சி பெறும் இவ்வாசிரியர்கள் தத்தமது பாடசாலைகளில் மாணவர்களுக்கு யோகாசனத்தை பயிற்றுவிக்கின்றனர். பயிற்சிக்குரிய மண்டப உதவியை பருத்தித்துறை ஞானாலயம் வழங்கி வருகிறது.
ஆலய பரிபாலன சபை தலைவர், யோகாசன ஆசான், வலய கல்வி பணிப்பாளர் மற்றும் உளவியல் மருத்துவரான வைத்திய கலாநிதி ஆகியோரால் ஒப்பமிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் இவ்விலவச பயிற்சி நெறி, மீண்டும் எதிர்வரும் சித்திரை விடுமுறைக் காலத்தில் நடாத்தப்படும்.
இதில் இணைய விரும்பும் ஆசிரியர்கள் புற்றளை யோக பாடசாலை (Puttalai Yoga School) எனும் முக நூல் ஊடாக மேலதிக தகவல்களைப் பெறவும் தம்மை இப்போதே பதிவு செய்யவும் முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM