கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு பத்திரிகைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அருகில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லொறியின் சாரதிக்கு தூக்க மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக வீதியை விட்டு விலகி கற்பாறையின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறியில் சாரதியோடு உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பிய இவர்கள் பத்திரிகைகளை வேறொரு லொறிக்கு மாற்றம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். அத்தோடு வீதி போக்குவரத்துக்கான பாதுகாப்பு சமிஞ்கைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.